Monday, December 26, 2011

முல்லை பெரியார்

முல்லை பெரியார்....

தமிழனின் இன்னொரு முட்டாள்த்தனமான சிந்தனை....

கூடங்குளம் பாதுகாப்பானதுன்னு சொல்ற மத்திய அரச நம்ப மாட்டானுவளாம்....

ஆனா அணை பாதுகாப்பானதுன்னு சொல்ற மத்திய அரச கேரளாக்காரனுவ நம்பனுமாம்...

தனக்குன்னா ரத்தம்... மத்தனுக்கு என்னா தக்காளி சாஸா...

Wednesday, December 21, 2011

ஒஸ்தி

டபாங் கின் அட்டு ரீ மேக்....

ஒக்கடுவை கில்லியாக்கிய தரணியா என்று அதிர வைத்த படம்....

வி.தா.வ... வானம் என கலக்கிய str திருந்திட்டார்னு நினைச்சி போனா... செருப்ப சாணில முக்கி மூஞ்சில அடிச்சி அனுப்பிட்டாரு...

படமா இது,,, பாடம்.... தியேட்டருக்கு வருவீங்களா... வருவீங்களான்னு...

Friday, December 16, 2011

children of heaven

நேத்துதான் இந்த படம் பாத்தேன்..
சிகரட் பிடிக்க கூட எந்திரிக்காம பாக்க முடிஞ்சிது
விமர்சனம் எல்லாரும் எழுதிருப்பாங்க
கண்டிப்பா பாக்க வேண்டிய படம்

Rise of the Planet of the Apes

சமீபத்தில் பார்த்தேன்... சிம்ப்ளி சூப்பர்ப்....

அதுவும் சீசர் குதிரையில் வரும் அந்த ஒரு சீன்.... வாவ்....

எதிர்காலம் குரங்குகள் கையில்....

Wednesday, December 14, 2011

முல்லை பெரியார்

என்னவோ போங்க... தமிழனுக்கு எல்லாப்பக்கமும் அடிதான்... இத்தன அடிவாங்கியும் வலிக்காத மாதிரி நடிக்கிறானே அதுக்கே அவார்ட் கொடுக்கனும்...

இப்ப என்னான்னா கூட்டம் கூட்டமா மஞ்சகொடிய தூக்கிட்டு வேற கிளம்பிர்றானுக... கூடங்குளம் கூட்டம் ஒருபக்கம்... தேனி மாவட்ட கூட்டம் ஒரு பக்கம்....

மொதல்ல நம்ம ஏரி, குளங்கள ரியல் எஸ்டேட் பேர்வழிகள்டேர்ந்து மீட்டு ஒழுங்கா மெயிண்டெயின் பண்ணாலே இந்த உணர்ச்சிவசப்பட்டு கூட்டம் சேர வேண்டிய அவசியம் இருக்காது... மழை நீர ஒழுங்கா சேமிச்சாலே மத்த மாநிலத்த எதிர்பார்க்காம நம்ம தேவையை பூர்த்தி செய்துக்கலாம்...

அத வுட்டுட்டு எப்ப பாத்தாலும் எல்லாரோடயும் சண்டய போட்டுட்டு இருந்தா என்னத்த சொல்ல....

Tuesday, October 4, 2011

DHOOKUDU

சினிமா ரசிகர்களின் மனதில் நிச்சயம் மகேஷ்பாபுவிற்கு ஒரு இடம் உண்டு... அத்தனை அசால்ட்டான நடிப்பு அவருடையது....

ஒக்கடு, அத்தடு, போக்கிரி தெலுகு சினிமாவின் சிகரம் தொட்டவை.,,

3 பெயிலியருக்குபின் ஒரு கம்பேக் மூவி தோக்குடு....

இரண்டாவது வாரமும் மும்பையில் படம் ஹவுஸ்ஃபுல்.... வேறென்ன சொல்ல படத்த பத்தி... ஆனால் போக்கிரி அளவு இல்லைதான்....

Monday, September 5, 2011

மங்காத்தா...

அஜீத்தின் அதிரடி ஆட்டம் அதிரி புதிரி ஹிட்... பர பர திரைக்கதையில் அஜித், அர்ஜூன் தவிர மற்றவர்கள் சென்னை 28 போல விடலைகளாக அமைந்ததுதான் பரிதாபம்....

எல்லா குறைகளையும் அசால்ட்டாக தூக்கி சாப்பிடுகிறது அஜீத்தின் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ்..

இரண்டு தடவை தியேட்டரில் பார்க்கலாம்...