Thursday, February 24, 2011

குழந்தை

சரியாக பதிமூண்று நாட்கள் கழித்து மனைவியும் ஒண்ணேகால் வயது மகனும் ஊரிலிருந்து வந்தனர். ரயில்வே ஸ்டேஷன் சென்று ரிசீவ் பண்ணிய என்னை ஒரு நொடி பார்த்த மகன் உடனே தாவி வந்து ஏறி என் கன்னத்தை தடவி அவன் கன்னத்தோடு ஒட்டி சிரித்து கொண்டே இருந்தான்... சுமார் ஒன்றரை மணி நேரம் என்னை விட்டு அம்மாவிடம் செல்லவேயில்லை.....

குழந்தையின் அன்பு.... ரியாக்ஷன்.... குழந்தையிடம் மட்டுமே கிடைக்கும் ஒரு அதிசய உணர்வு.... மற்ற யாரயிருந்தாலும் ஒரு செயற்கைதனம் வந்து விடும்....

நேற்று உணர்ந்தேன்....

Sunday, February 13, 2011

யுத்தம் செய்

நான் காதலில் தோற்று தாடியோடு திரிந்த காலத்தில் வந்த படம் சித்திரம் பேசுதடி.... கல்யாணம் ஆகி 2ம் நாள் மனைவியோடு பார்த்தது அஞ்சாதே....

மிஷ்கின் எந்த அளவு என் வாழ்வில் இம்பாக்ட் ஆகியிருக்கிறார்..... சித்திரம் பேசுதடி மெலடிக்களை கேட்டு கொண்டே தூங்கிய நாட்கள் பல..... அஞ்சாதே எப்போது வேண்டுமானாலும் பார்க்கும் ஒரு விறு விறு படம்... சாதரண தமிழ் சினிமாவின் பேட்டர்ன் இல்லாமல் ஒரு புது அனுபவத்தை தந்த படங்கள் அவை இரண்டும்.....


நந்தலாலா... சுத்தமாக பிடிக்கவில்லை.... இளையராஜா ஒரு காரணமாக கூட இருக்கலாம்.....

ஒருவாரம் கழித்து இங்கு ரிலீஸ் ஆன யுத்தம் செய் பார்த்தேன்.... தியேட்டரில் நல்ல கூட்டம்... மிஷ்கினுக்காக......


கதை : ஒரு இருபது வருடங்களுக்கு முந்திய ராஜேஷ்குமார் நாவல்.... அதே நடையில் திரைக்கதையும் இருந்தது பரிதாபம்...... வ‌ச‌ன‌ம் மிஷ்கின் ட‌ச்..... ஆனாலும் ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளில் கேட்ட‌ பார்த்த அதே காட்சி அமைப்புக‌ள்.... உதார‌ண‌ம்... சேர‌ன் இன்ஸ்பெக்ட‌ரிட‌ம் விசாரிக்கும்போது இன்ஸ்பெக்ட‌ர் டீ சொல்லும் காட்சி ஆன‌ந்த‌ம் ப‌ட‌த்தில் வ‌ந்த‌து.....


சேர‌ன் : விஜ‌ய் காவ‌ல‌னில் ப‌ஞ்ச் இல்லாம‌ல் ந‌டித்த‌து போல் சேர‌ன் அழாம‌ல் ந‌டித்திருக்கிறார்.... இந்த‌ ப‌ட‌த்துத்தில் சார்லி ந‌டித்தால் எப்ப‌டி இருக்குமோ அப்ப‌டி செய‌ற்கையாக இருந்த‌து சேர‌னின் ந‌டிப்பு ம‌ற்றும் கேர‌க்ட‌ரைசேஷ‌ன்.... க‌ம‌லோ, ந‌ரேனோ ந‌டித்திருந்தால் பெட்ட‌ராக‌ இருக்கும்....


ஜெய‌ப்பிர‌காஷ் ந‌ன்றாக‌ ந‌டித்தாலும்... க‌டைசியில் குண்ட‌டிப‌ட்டு குடித்துக்கொண்டே ஃப்ளாஷ்பேக் சொல்லும் போது த‌மிழ்ப‌ட‌த்துக்கே சவால் விடுகிறார்.... சிக்க‌ன் டிக்கா சாப்பிடாத‌தே மிச்ச‌ம்....


மொத்த‌தில் அஞ்சாதே மிஷ்கினின் அரைவேக்காட்டு யுத்த‌ம் ...

Tuesday, February 8, 2011

Sanctum

Sanctum ‍ உலகின் மிகப்பெரிய திருட்டுத்தனமான படங்களில் ஒன்று.... ஜேம்ஸ் கேமரூன் படம் என்று அட்வர்டைஸ் செய்ததால் நுழைந்தால் கழுத்தில் மொன்ன கத்தி வச்சி அறுக்காத குறைதான்....

கடைசியில்தான் சொல்கிறார்கள்... ஜேம்ஸ் வெறும் எக்சிகியூடிவ் ப்ரொடியூசர்தானாம்.... வேறு யாரோ டைரக்டராம்.....

என்னா ஓரு ஏமாற்று வேலை... ம.அம்பு ஓவியாவின் நிலையை நினைத்து ஆறுதல் பட்டு கொண்டேன்.....