நான் காதலில் தோற்று தாடியோடு திரிந்த காலத்தில் வந்த படம் சித்திரம் பேசுதடி.... கல்யாணம் ஆகி 2ம் நாள் மனைவியோடு பார்த்தது அஞ்சாதே....
மிஷ்கின் எந்த அளவு என் வாழ்வில் இம்பாக்ட் ஆகியிருக்கிறார்..... சித்திரம் பேசுதடி மெலடிக்களை கேட்டு கொண்டே தூங்கிய நாட்கள் பல..... அஞ்சாதே எப்போது வேண்டுமானாலும் பார்க்கும் ஒரு விறு விறு படம்... சாதரண தமிழ் சினிமாவின் பேட்டர்ன் இல்லாமல் ஒரு புது அனுபவத்தை தந்த படங்கள் அவை இரண்டும்.....
நந்தலாலா... சுத்தமாக பிடிக்கவில்லை.... இளையராஜா ஒரு காரணமாக கூட இருக்கலாம்.....
ஒருவாரம் கழித்து இங்கு ரிலீஸ் ஆன யுத்தம் செய் பார்த்தேன்.... தியேட்டரில் நல்ல கூட்டம்... மிஷ்கினுக்காக......
கதை : ஒரு இருபது வருடங்களுக்கு முந்திய ராஜேஷ்குமார் நாவல்.... அதே நடையில் திரைக்கதையும் இருந்தது பரிதாபம்...... வசனம் மிஷ்கின் டச்..... ஆனாலும் பல படங்களில் கேட்ட பார்த்த அதே காட்சி அமைப்புகள்.... உதாரணம்... சேரன் இன்ஸ்பெக்டரிடம் விசாரிக்கும்போது இன்ஸ்பெக்டர் டீ சொல்லும் காட்சி ஆனந்தம் படத்தில் வந்தது.....
சேரன் : விஜய் காவலனில் பஞ்ச் இல்லாமல் நடித்தது போல் சேரன் அழாமல் நடித்திருக்கிறார்.... இந்த படத்துத்தில் சார்லி நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி செயற்கையாக இருந்தது சேரனின் நடிப்பு மற்றும் கேரக்டரைசேஷன்.... கமலோ, நரேனோ நடித்திருந்தால் பெட்டராக இருக்கும்....
ஜெயப்பிரகாஷ் நன்றாக நடித்தாலும்... கடைசியில் குண்டடிபட்டு குடித்துக்கொண்டே ஃப்ளாஷ்பேக் சொல்லும் போது தமிழ்படத்துக்கே சவால் விடுகிறார்.... சிக்கன் டிக்கா சாப்பிடாததே மிச்சம்....
மொத்ததில் அஞ்சாதே மிஷ்கினின் அரைவேக்காட்டு யுத்தம் ...
Sunday, February 13, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment