Monday, December 26, 2011

முல்லை பெரியார்

முல்லை பெரியார்....

தமிழனின் இன்னொரு முட்டாள்த்தனமான சிந்தனை....

கூடங்குளம் பாதுகாப்பானதுன்னு சொல்ற மத்திய அரச நம்ப மாட்டானுவளாம்....

ஆனா அணை பாதுகாப்பானதுன்னு சொல்ற மத்திய அரச கேரளாக்காரனுவ நம்பனுமாம்...

தனக்குன்னா ரத்தம்... மத்தனுக்கு என்னா தக்காளி சாஸா...

Wednesday, December 21, 2011

ஒஸ்தி

டபாங் கின் அட்டு ரீ மேக்....

ஒக்கடுவை கில்லியாக்கிய தரணியா என்று அதிர வைத்த படம்....

வி.தா.வ... வானம் என கலக்கிய str திருந்திட்டார்னு நினைச்சி போனா... செருப்ப சாணில முக்கி மூஞ்சில அடிச்சி அனுப்பிட்டாரு...

படமா இது,,, பாடம்.... தியேட்டருக்கு வருவீங்களா... வருவீங்களான்னு...

Friday, December 16, 2011

children of heaven

நேத்துதான் இந்த படம் பாத்தேன்..
சிகரட் பிடிக்க கூட எந்திரிக்காம பாக்க முடிஞ்சிது
விமர்சனம் எல்லாரும் எழுதிருப்பாங்க
கண்டிப்பா பாக்க வேண்டிய படம்

Rise of the Planet of the Apes

சமீபத்தில் பார்த்தேன்... சிம்ப்ளி சூப்பர்ப்....

அதுவும் சீசர் குதிரையில் வரும் அந்த ஒரு சீன்.... வாவ்....

எதிர்காலம் குரங்குகள் கையில்....

Wednesday, December 14, 2011

முல்லை பெரியார்

என்னவோ போங்க... தமிழனுக்கு எல்லாப்பக்கமும் அடிதான்... இத்தன அடிவாங்கியும் வலிக்காத மாதிரி நடிக்கிறானே அதுக்கே அவார்ட் கொடுக்கனும்...

இப்ப என்னான்னா கூட்டம் கூட்டமா மஞ்சகொடிய தூக்கிட்டு வேற கிளம்பிர்றானுக... கூடங்குளம் கூட்டம் ஒருபக்கம்... தேனி மாவட்ட கூட்டம் ஒரு பக்கம்....

மொதல்ல நம்ம ஏரி, குளங்கள ரியல் எஸ்டேட் பேர்வழிகள்டேர்ந்து மீட்டு ஒழுங்கா மெயிண்டெயின் பண்ணாலே இந்த உணர்ச்சிவசப்பட்டு கூட்டம் சேர வேண்டிய அவசியம் இருக்காது... மழை நீர ஒழுங்கா சேமிச்சாலே மத்த மாநிலத்த எதிர்பார்க்காம நம்ம தேவையை பூர்த்தி செய்துக்கலாம்...

அத வுட்டுட்டு எப்ப பாத்தாலும் எல்லாரோடயும் சண்டய போட்டுட்டு இருந்தா என்னத்த சொல்ல....

Tuesday, October 4, 2011

DHOOKUDU

சினிமா ரசிகர்களின் மனதில் நிச்சயம் மகேஷ்பாபுவிற்கு ஒரு இடம் உண்டு... அத்தனை அசால்ட்டான நடிப்பு அவருடையது....

ஒக்கடு, அத்தடு, போக்கிரி தெலுகு சினிமாவின் சிகரம் தொட்டவை.,,

3 பெயிலியருக்குபின் ஒரு கம்பேக் மூவி தோக்குடு....

இரண்டாவது வாரமும் மும்பையில் படம் ஹவுஸ்ஃபுல்.... வேறென்ன சொல்ல படத்த பத்தி... ஆனால் போக்கிரி அளவு இல்லைதான்....

Monday, September 5, 2011

மங்காத்தா...

அஜீத்தின் அதிரடி ஆட்டம் அதிரி புதிரி ஹிட்... பர பர திரைக்கதையில் அஜித், அர்ஜூன் தவிர மற்றவர்கள் சென்னை 28 போல விடலைகளாக அமைந்ததுதான் பரிதாபம்....

எல்லா குறைகளையும் அசால்ட்டாக தூக்கி சாப்பிடுகிறது அஜீத்தின் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ்..

இரண்டு தடவை தியேட்டரில் பார்க்கலாம்...

Thursday, August 4, 2011

குழந்தை

சரியா பதினைந்து நாள் கழித்து என் மனைவியும் மகனும் ஊரிலிருந்து வந்தனர்... அதே போல் ரிசீவ் பண்ண போயிருந்தேன்.... என் மகனின் ரியாக்ஷனை மனதில் அசை போட்டபடி காத்திருந்தேன்... வரும்போது தூங்கி கொண்டிருந்தவன்... சற்று நேரம் கழித்து கண்விழித்து என்னை பார்த்து.. ஒரு சிக்கன சிரிப்பு மட்டும் சிரித்து என்னிடம் தாவினான்.... கொஞ்சல் எதுவும் இல்லை.... வளர்ந்து விட்டான்.....

Thursday, February 24, 2011

குழந்தை

சரியாக பதிமூண்று நாட்கள் கழித்து மனைவியும் ஒண்ணேகால் வயது மகனும் ஊரிலிருந்து வந்தனர். ரயில்வே ஸ்டேஷன் சென்று ரிசீவ் பண்ணிய என்னை ஒரு நொடி பார்த்த மகன் உடனே தாவி வந்து ஏறி என் கன்னத்தை தடவி அவன் கன்னத்தோடு ஒட்டி சிரித்து கொண்டே இருந்தான்... சுமார் ஒன்றரை மணி நேரம் என்னை விட்டு அம்மாவிடம் செல்லவேயில்லை.....

குழந்தையின் அன்பு.... ரியாக்ஷன்.... குழந்தையிடம் மட்டுமே கிடைக்கும் ஒரு அதிசய உணர்வு.... மற்ற யாரயிருந்தாலும் ஒரு செயற்கைதனம் வந்து விடும்....

நேற்று உணர்ந்தேன்....

Sunday, February 13, 2011

யுத்தம் செய்

நான் காதலில் தோற்று தாடியோடு திரிந்த காலத்தில் வந்த படம் சித்திரம் பேசுதடி.... கல்யாணம் ஆகி 2ம் நாள் மனைவியோடு பார்த்தது அஞ்சாதே....

மிஷ்கின் எந்த அளவு என் வாழ்வில் இம்பாக்ட் ஆகியிருக்கிறார்..... சித்திரம் பேசுதடி மெலடிக்களை கேட்டு கொண்டே தூங்கிய நாட்கள் பல..... அஞ்சாதே எப்போது வேண்டுமானாலும் பார்க்கும் ஒரு விறு விறு படம்... சாதரண தமிழ் சினிமாவின் பேட்டர்ன் இல்லாமல் ஒரு புது அனுபவத்தை தந்த படங்கள் அவை இரண்டும்.....


நந்தலாலா... சுத்தமாக பிடிக்கவில்லை.... இளையராஜா ஒரு காரணமாக கூட இருக்கலாம்.....

ஒருவாரம் கழித்து இங்கு ரிலீஸ் ஆன யுத்தம் செய் பார்த்தேன்.... தியேட்டரில் நல்ல கூட்டம்... மிஷ்கினுக்காக......


கதை : ஒரு இருபது வருடங்களுக்கு முந்திய ராஜேஷ்குமார் நாவல்.... அதே நடையில் திரைக்கதையும் இருந்தது பரிதாபம்...... வ‌ச‌ன‌ம் மிஷ்கின் ட‌ச்..... ஆனாலும் ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளில் கேட்ட‌ பார்த்த அதே காட்சி அமைப்புக‌ள்.... உதார‌ண‌ம்... சேர‌ன் இன்ஸ்பெக்ட‌ரிட‌ம் விசாரிக்கும்போது இன்ஸ்பெக்ட‌ர் டீ சொல்லும் காட்சி ஆன‌ந்த‌ம் ப‌ட‌த்தில் வ‌ந்த‌து.....


சேர‌ன் : விஜ‌ய் காவ‌ல‌னில் ப‌ஞ்ச் இல்லாம‌ல் ந‌டித்த‌து போல் சேர‌ன் அழாம‌ல் ந‌டித்திருக்கிறார்.... இந்த‌ ப‌ட‌த்துத்தில் சார்லி ந‌டித்தால் எப்ப‌டி இருக்குமோ அப்ப‌டி செய‌ற்கையாக இருந்த‌து சேர‌னின் ந‌டிப்பு ம‌ற்றும் கேர‌க்ட‌ரைசேஷ‌ன்.... க‌ம‌லோ, ந‌ரேனோ ந‌டித்திருந்தால் பெட்ட‌ராக‌ இருக்கும்....


ஜெய‌ப்பிர‌காஷ் ந‌ன்றாக‌ ந‌டித்தாலும்... க‌டைசியில் குண்ட‌டிப‌ட்டு குடித்துக்கொண்டே ஃப்ளாஷ்பேக் சொல்லும் போது த‌மிழ்ப‌ட‌த்துக்கே சவால் விடுகிறார்.... சிக்க‌ன் டிக்கா சாப்பிடாத‌தே மிச்ச‌ம்....


மொத்த‌தில் அஞ்சாதே மிஷ்கினின் அரைவேக்காட்டு யுத்த‌ம் ...

Tuesday, February 8, 2011

Sanctum

Sanctum ‍ உலகின் மிகப்பெரிய திருட்டுத்தனமான படங்களில் ஒன்று.... ஜேம்ஸ் கேமரூன் படம் என்று அட்வர்டைஸ் செய்ததால் நுழைந்தால் கழுத்தில் மொன்ன கத்தி வச்சி அறுக்காத குறைதான்....

கடைசியில்தான் சொல்கிறார்கள்... ஜேம்ஸ் வெறும் எக்சிகியூடிவ் ப்ரொடியூசர்தானாம்.... வேறு யாரோ டைரக்டராம்.....

என்னா ஓரு ஏமாற்று வேலை... ம.அம்பு ஓவியாவின் நிலையை நினைத்து ஆறுதல் பட்டு கொண்டேன்.....

Sunday, January 16, 2011

விமர்சனம்

சிறுத்தை ‍‍‍சும்மா சீறுது.... பண்டிகை ரிலீசுக்கான அக்மார்க் மசாலா படம்.... கார்த்தி, சந்தானம் சும்மா பட்டய கிளப்பிட்டாங்க‌


காவலன் ‍ ஜித்தன் ரமேஷ், ஜீவா பண்ண வேண்டிய கதையில் விஜய்..... விஜ‌யே விநியோக‌ம் பண்ணியிருப்ப‌தால்... ந‌டிக‌ர் விஜ‌யிட‌ம் விநியோக‌ஸ்த‌ர் விஜ‌ய் ந‌ஷ்ட‌ ஈடு கேட்பார்....

Sunday, January 9, 2011

செய்தி

வெளிநாடு வாழ் இந்தியர் கருத்தரங்கில் பேசும் போது பிரதமர் அவர்களுக்கு பெருமை அளிக்கும் விஷயமாக குறிப்பிட்டது....
1) பெங்களூர் கணினி புரட்சி
2) குஜராத் தொழிற்புரட்சி
3) தமிழ் திரைப்பட வளர்ச்சி

மூணாவது பாயின்டில் எந்திரனை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.... எந்திரனுக்கு மேலும் ஒரு பாராட்டு...

மேலும் குஜராத் மற்றும் கர்நாடகாவில் பாஜக ஆள்வதால்... காங்கிரசை விட பாஜக மேல் என்று மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.... அதனால் அவருக்கு ஒரு வாழ்த்து

Friday, January 7, 2011

எந்திரன்

எந்திரன் நூறாவது நாள் இன்று.....
நூறு நாள் சாதனை படத்தை சன் டிவி ப்ரோமோட் செய்யும் விதம் எரிச்சலூட்டுகிறது....அவர்களுக்கு தேவையான பணம் கிடைத்தவுடன் அடுத்த விஷயத்திற்கு தாவி விட்டனர்....
எனிவே ர‌ஜினி, ஷ‌ங்க‌ர், கலாநிதி மாற‌னுக்கு வாழ்த்துக்க‌ள்... ஒரு இந்திய‌ சாத‌னை ப‌ட‌த்தை அளித்த‌த‌ற்கு....
2010 ‍ ர‌ஜினி ஆண்டு.....

Thursday, January 6, 2011

படம் சொல்லும் செய்தி


கிருஷ்ணா கமிட்டி அறிக்கை

இருக்கிறவனல்லாம் கிறுக்கன்னு நினைக்கிறாங்களா? இல்ல இவனுக கிறுக்கனுங்களான்னு தெரில...

இன்னிக்கு வந்த கிருஷ்ணா கமிட்டி அறிக்கையத்தான் சொல்றேன்.... இப்பிடி ஒரு அறிக்கைய குடுக்க இவனுகளுக்கு மக்கள்பணத்திலேர்ந்து செலவு வேற...

வாய்ல கெட்ட வார்த்தைதான் வருது

Tuesday, January 4, 2011

டைம் பாஸ்

சமீபத்தில் கேட்ட பாடல்களில் காவலன் ஸ்டெப் இட் அப் நன்றாக இருந்தது.... 3 இடியட்ஸில் நடிக்காத காரணம் அப்படத்தின் சூப்பர் ஹிட் பாட்டை ரீமேக் பண்ணியதால் கூட இருக்கலாம்...
.
எந்திரன் நூறாவது நாளை நெருங்குறது... போட்டியாளர் என நினைத்து கொண்டிருக்கும் கமலின் மன்னாரு அம்பு 2 வாரம் கூட தாக்குபிடிக்க முடியாத சூழ்நிலையில் எந்திரனின் சாதனை பிரம்மிப்பானது.....

தீஸ் மர் கான் பட சீலா பாடலை கேட்டு பாருங்கள்... காத்ரீனாவின் கெட்ட ஆட்டத்தோடு பார்த்தால் இன்னும் சூப்பர்....

செய்திகள்

புதுவருஷத்தின் ஆரம்ப முக்கிய செய்தி....
ஆந்திராவில் சூரி போட்டு தள்ளப்பட்டது.... இது பற்றி மேலும் விவரங்களுக்கு உண்மை தமிழனை படியுங்கள்.....
இன்று புத்தகம் வெளியிடும் அண்ணன் கேபிள் சங்கருக்கு வாழ்த்துக்கள்....

அறிவிப்பு

புத்தாண்டில் இருந்து நானும் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்....
தில்லாலங்கடி சந்தானத்தோட பேஷன்ட் மாதிரி என்னோட ஒரே ஒரு ஃபாலோயர் கெட் ரெடி